ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை Woqod தற்காலிகமாக மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக Woqod தனது டுவிட்டரில், பராமரிப்பு பணிகளுக்காக இவ்வாறு கத்தார் விமான நிலைய எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று(17) காலை 7 மணி முதல், மதியம் வரை மூடப்பட்டிருக்கும் என்பதாக தெரிவித்துள்ளது.
எனவே வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்கான எரிபொருள்களை நிரப்ப அருகிலுள்ள ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.