கத்தாரில் இதுவரை ஒரு இலட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார அமைச்சின் (MoPH) தடுப்பூசித் தலைவர் டாக்டர் சோஹா அல் பயாத் அவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, : “இதுவரை 100,000 க்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துள்ளனர் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; அதற்கு அதிக தேவை உள்ளது. இலக்கு குழுவில் குறைந்தது 50% ஐ எட்டியுள்ளோம். ” என்றார்.
"மேலும் வரும் நாட்களில் அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதைப் பார்ப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் சுகாதார அமைச்சு நடத்திய நேரடி இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் அமர்வில் தெரிவித்துள்ளார்.
COVID-19 தடுப்பூசி இலவசம் என்றும் உங்களிடம் சுகாதார அட்டை இல்லையென்றால் பதிவு நோக்கத்திற்காக பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால் தடுப்பூசிக்கு அல்ல என்றும் டாக்டர் அல் பயாத் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.