Saturday, February 20, 2021

கத்தாரில் கார்களில் பயணிப்பவர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள முக்கியமான அறிவித்தல்!

MOI Qatar

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப் படுத்தும் நோக்கில் கத்தாரில் மீண்டும் சில முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிதல், வாகனத்தில் 4 பேர் மட்டும் பயணித்தல் என்பன அதில் முக்கிமானவையாகும்.

இது பற்றி உள்துறை அமைச்சு கார்களில் வாகன ஓட்டுநருடன் சேர்த்து அதிகபட்சமாக 4 நபர்கள் மாத்திரமே பயணிக்க முடியும். என்றாலும் குடும்பங்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகின்றன என்பதாக முகநூல் மூலம் இன்று (20.02.2021) தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனாவின் அச்சுறுத்தல் ஓரளவு குறைந்திருந்தாலும், இரண்டாவது கொரோனா அலை ஏற்படலாம் என்ற அச்சம் உயர் மட்டத்தில் நிலவுவதனால் இது போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்
Disqus Comments